புதன், 20 ஜனவரி, 2010

நொறுக்குத் தீனி!

நமது ஊரில் இந்த ஆண்டு தே.கோ.ம. மேல்நிலைப் பள்ளியில் 18.01.2010 அன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பானையில் பொங்கலிட்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது. எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு தமிழர் திருநாளை பள்ளியில் கொண்டாடியது பெருமைதான். இதையே ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளுக்கு முன்பே கொண்டாடி மாணவர்களை உற்சாகத்துடன் அனுப்பவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

*************************************

"தமிழ்படம்" செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்கொண்டிருக்கிறது. படத்தை பற்றிய ஒவ்வொரு செய்தியும் படம் பார்க்கும் ஆவலை தூண்டிக்கொண்டு இருக்கிறது. இன்று இந்த படத்தின் பாடல்களை கேட்டேன். என்ன சொல்வது என்றே தெரியவில்லை? அறிமுக இசையமைப்பாளர் என்று இல்லாமல் கண்ணன் அருமையாக விளையாடி இருக்கிறார். அனைத்து பாடல்களும் வயிற்றை புண்ணாக்குகின்றன. அதிலும் ஹரிஹரனும், ஸ்வேதா மேனனும் இணைந்து பாடியிருக்கும் "ஓ! மஹ ஸியா" பாடல் அருமையான மெலடி. கேட்பதற்கு மிகவும் அருமை. ஆனால் பாடலை கேட்கும்போது சிரிப்பை மட்டும்தான் அடக்க முடியவில்லை. அந்த பாடலின் வரிகளை கீழே தந்துள்ளேன். படித்து சிரிக்காதவர்கள் தங்கள் பெயர்களை எனக்கு பின்னூட்டம் இடுங்கள். சாதனையாளர் பட்டியலில் சேர்த்து விடுகிறேன். மேலும் பாடலின் அர்த்தம் யாருக்காவது தெரிந்தால் அதையும் அனுப்பி வையுங்கள். இனி பாடல் வரிகள் ...

பல்லவி:
ஓ! மஹ ஸியா! ஓ! மஹ ஸியா!
நாக்க முக்க நாக்கா!
பூம் ஷக்கலக்கா!
ஓ! ரண்டக்கா!

ஓ! மஹ ஸியா! ஓ! மஹ ஸியா!

நாக்க முக்க நாக்கா!
பூம் ஷக்கலக்கா!
ஓ! ரண்டக்கா!

உல்லாஹி உல்லாஹி
ஆயக்க யாஹி யாஹி
மேஹூ மேஹூ
டைலமோ டைலமோ...
ரஹாத்துல்லா சோனாலியோ...
[ஓ! மஹ ஸியா ஓ! மஹ ஸியா!]

சரணம் 1:
சம்பா சம்பாலே
ஒசூசே சாயோ சாயோ ...

ஹசிலி பிஸிலீ
இல்லாஹி அப்பான் ஜிப்பா...

சம்பா சம்பாலே
ஒசூசே சாயோ சாயோ ...

ஹசிலி பிஸிலீ
இல்லாஹி அப்பான் ஜிப்பா...

டைலமோ டைலமோ
பல்லேலக்கா...

டைலமோ டைலமோ
பல்லேலக்கா...

நாக்க முக்க நாக்கா!
பூம் ஷக்கலக்கா!
ஓ! ரண்டக்கா!
[ஓ! மஹ ஸியா ஓ! மஹ ஸியா!]

சரணம் 2:
ஏ! சலுசாலா
இஸ்கு பராரா
ஒசக்கு முராயா...

பூம் பூம் ஜக்காக்கா
முக்காலா
மையா மையா...

ஏ! சலுசாலா
இஸ்கு பராரா
ஒசக்கு முராயா...

பூம் பூம் ஜக்காக்கா
முக்காலா
மையா மையா...

லாலாக்கு லாலாக்கு
டோல் டப்பிமா...

லாலாக்கு லாலாக்கு
டோல் டப்பிமா...

நாக்க முக்க நாக்கா!
பூம் ஷக்கலக்கா!
ஓ! ரண்டக்கா!
[ஓ! மஹ ஸியா ஓ! மஹ ஸியா!]

*************************************

நமது ஊரை புதிய வட்டமாக (தாலுக்கா) அறிவிக்கக்கோரி தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். நன்று. நமது ஊரை வட்டமாக அறிவித்தால் சுற்றியுள்ள உள்ள பகுதி மக்களுக்கு மிகவும் எளிமையாக வேலை முடியும். தமிழக அரசுக்கு இதனை பற்றிய செய்தியை நமது பேரூராட்சி தலைவரும், நம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும்தான் கொண்டுசெல்ல வேண்டும்.

*************************************

தமிழர் திருநாளாம் பொங்கல் அன்றைக்கு எதிர்பாராத விதமாக "குட்டி" படம் பார்க்க நேர்ந்தது. படம் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்று கூற நான் விரும்பவில்லை. அது பார்ப்பவரின் மன நிலையை பொறுத்தது. நான் சொல்ல விரும்புவது இது "ஆர்யா" என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்றார்கள். எனக்கு என்னவோ பல காட்சிகள் நமது தமிழ் படமான "டார்லிங் டார்லிங் டார்லிங்" படத்தை ஞாபகப்படுத்தியது. ஒருவேளை, தமிழ் "டார்லிங் டார்லிங் டார்லிங்" படம் சிறிது மாற்றம் செய்யப்பட்டு தெலிங்கில் ரீமேக் ஆகி, பிறகு அங்கிருந்து குட்டியாக இறக்குமதி செய்யப்பட்டதோ?

*************************************