உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வா.செ.குழந்தைசாமி அவர்கள் எழுத்து சீர்திருத்தம் கொண்டுவர முயற்சிப்பதாக ஒரு கட்டுரை படித்தேன். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் அந்த சீர்திருத்தம் தேவையற்றது என்பது எனது கருத்து. என்ன மாதிரியான சீர்திருத்தம் என்றால் ‘அ’கர வரிசையிலோ, ‘ஆ’கார வரிசையிலோ எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ‘கி’ என்று எழுதுவதற்கு பதிலாக ‘க’வைத் தனியாகவும், மேலே சுழிக்கப்பட்டுள்ள கொம்பினைத் தனியாகவும் பிரித்து எழுதவேண்டும் என்பது போன்ற சீர்திருத்தமாம் அது. அதுபோல ‘கீ’ என்ற எழுத்திலும் ‘க’வைத் தனியாகவும், மேலே உள்ள கொம்பினைத் தனியாகவும் பிரித்து எழுதவேண்டும். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தைப் பார்க்கவும். இந்த சீர்திருத்தம் ஒருவேளை ஏற்றுக்கொண்டால் அடுத்தத் தலைமுறைக்கு எப்படியோ இந்த தலைமுறை தலையைப் பிய்த்துக்கொள்ளும் என்பது உண்மை.

%%%%%%%%%%

“சுறா படத்திற்கு டிக்கெட் வாங்குறத்து முன்னாடி ஒரு தடவைக்கு நூறு தடவை நல்லா யோசிச்சுக்கோ... ஒரு தடவை டிக்கெட் வாங்கிட்டா அப்புறம் உன்னால யோசிக்கவே முடியாது...”
படமே இன்னும் வெளிவரவில்லை. பதிவர்களும் எஸ்.எம்.எஸ். பிரியர்களும் விஜய் படம் வெளி வந்தாலே இந்த வேலையை ஆரம்பித்து விடுகிறார்கள். விஜயின் பஞ்ச் வசனத்தை வைத்தே அவரைக் கலாய்ப்பது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ!
14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு வைத்துக்கொள்வது குற்றம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அதனை எத்தனை கடை முதலாளிகள் கடைபிடிக்கின்றனர் என்று தெரியவில்லை. சிதம்பரம் மேலவீதியில் இயங்கிவரும் நூதனம் பல்பொருள் அங்காடிக்குச் சென்றவர்கள் நிச்சயம் இதனை உணர்ந்திருப்பார்கள். அங்கு வேலைசெய்யும் பெரும்பாலானோர் குழந்தைத் தொழிலாளர்களே. திறந்திருக்கும் நேரமெல்லாம் பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருக்கும் இக்கடைக்குச் சென்றால் இரசீது போடுகின்ற பையனை கவனியுங்கள். அவனுக்கு நிச்சயம் 12 வயதிற்குமேல் இருக்க வாய்ப்பில்லை. இதேபோல் சேலம் பேருந்து நிலையத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆர்த்தி உணவகத்திலும் தண்ணீர் பரிமாறும் அனைவருமே குழந்தைத் தொழிலாளர்களே...
%%%%%%%%%%
கடந்த 25.04.2010 அன்று பட்டுக்கோட்டைக்கு சென்றிருந்தேன். அங்கு தண்ணீர் குடிக்கலாம் என்று தண்ணீர் பாட்டில் வாங்க கடைக்குச்சென்று பார்த்தால் அதிர்ச்சி. பாட்டிலில் இருந்த பெயர்கள் எல்லாமே பிராந்தி, விஸ்கியின் பெயர்கள். கிங்பிஷர் பிரிமியம், எம்சி ராயல் சேலஞ்ச் என்ற பெயர்களில் தண்ணீர் பாட்டில் விற்றுக்கொண்டிருந்தார்கள். இவை எல்லாமே அந்தந்த கம்பெனியின் பாட்டில்களா என்று விசாரித்தேன். ஆம் என்றார் கடைக்காரர். பாட்டிலில் மேல் உள்ள முகவரியைப் பார்த்தால் திண்டுக்கல் முகவரி இருந்தது. எல்லாம் வியாபார தந்திரமாக இருக்குமோ?
0 comments:
கருத்துரையிடுக