மெரீனா கடற்கரை. கண்ணகி சிலை அருகே சித்தனை கை கால்களை கட்டிப் போட்டு வைத்திருந்தார்கள்.
"நாட்டு நடப்பு ஏடாகூடமா போய்க்கிட்டு இருக்கு. நம்ப ஆளு என்னடான்னா சத்தமே இல்லாம ஊர் சுத்திகிட்டு இருக்காரு. அதான் கட்டித் தூக்கி வந்துட்டேன்"என அக்கறையோடு சொன்னான் 'சுவருமுட்டி' சுந்தரம்."அய்யோ...என்னை போற வர்ற ஜனங்க எல்லாம் பார்க்குறாய்ங்க. நான் ஏதோ தப்பான ஆளுன்னு நினைச்சுட போறாய்ங்க. முதல்ல என் கை கால் கட்டை அவிழ்த்து விடுங்கப்பா" என்று சித்தன் கெஞ்சிக் கொண்டிருந்தார். "அலப்பறை டீமுக்கு தலைவரா இருந்துகிட்டு அடிக்கடி கூட்டத்தை கூட்டாம இருந்தா என்னய்யா அர்த்தம். நம்ப
வாசகருங்க என்ன நினைப்பாங்க. கொஞ்சம்கூட அக்கறை இல்லையே உனக்கு" என்ற 'கோட்டை' கோபாலு, "நீ இப்படியே இரு. அப்பதான் சரிபட்டு வரும்" என்றவாறு நாட்டு நடப்பை பேசத் தொடங்கினார்.
"நாட்டு நடப்பு ஏடாகூடமா போய்க்கிட்டு இருக்கு. நம்ப ஆளு என்னடான்னா சத்தமே இல்லாம ஊர் சுத்திகிட்டு இருக்காரு. அதான் கட்டித் தூக்கி வந்துட்டேன்"என அக்கறையோடு சொன்னான் 'சுவருமுட்டி' சுந்தரம்."அய்யோ...என்னை போற வர்ற ஜனங்க எல்லாம் பார்க்குறாய்ங்க. நான் ஏதோ தப்பான ஆளுன்னு நினைச்சுட போறாய்ங்க. முதல்ல என் கை கால் கட்டை அவிழ்த்து விடுங்கப்பா" என்று சித்தன் கெஞ்சிக் கொண்டிருந்தார். "அலப்பறை டீமுக்கு தலைவரா இருந்துகிட்டு அடிக்கடி கூட்டத்தை கூட்டாம இருந்தா என்னய்யா அர்த்தம். நம்ப
வாசகருங்க என்ன நினைப்பாங்க. கொஞ்சம்கூட அக்கறை இல்லையே உனக்கு" என்ற 'கோட்டை' கோபாலு, "நீ இப்படியே இரு. அப்பதான் சரிபட்டு வரும்" என்றவாறு நாட்டு நடப்பை பேசத் தொடங்கினார். "ஏம்பா சுவருமுட்டி. நீ ஏர்போர்ட் பக்கம் போயிருந்தியா? விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனோட அம்மா பார்வதி அம்மா விஷயத்துல என்ன நடந்துச்சு? ஏன் அவிங்களை விமான நிலையத்துல இருந்து இறக்காம திருப்பி அனுப்பினாங்களாம்?" என்று ஆதங்கத்தோடு கேட்டார் அன்வர்.
"அன்னைக்கு காலையில்தான் மலேசியாவில் இருக்கிற இந்திய தூதரகம் பார்வதி அம்மையாருக்கு மருத்துவத்திற்காக விசா கொடுத்தது. உடனே அன்னைக்கு இரவு விமானத்தில் அவரை இங்க கொண்டு வர்ற முயற்சிய பழ. நெடுமாறனும், வைகோவும் ரகசியமா செஞ்சாங்க. எப்படியாவது இங்க கொண்டு வந்துடணும்னு மத்த ஈழ ஆதரவு தலைவருங்ககிட்ட கூட சொல்லலை. ரகசியமா வச்சிருந்தாங்க. அதனால அன்னைக்கு இரவு பத்து மணி வாக்கிலேயே விமான நிலையத்துக்கு போனாங்க. கூடவே பழ. நெடுமாறனோட மகள் பூங்குழலியும் போயிருக்காங்க. தலைவருங்க இரண்டு பேரும் வண்டியிலேயே உட்கார்ந்திருக்க,பூங்குழலி போய் நுழைவுச் சீட்டை வாங்கி வந்திருக்காங்க.விமானம் வந்திறங்கிய பிறகு
இரண்டு தலைவரும் உள்ள போயிருக்காங்க.அதுக்கு முன்னாடியே ரகசியமான இந்த தகவலு கலைருக்கு தெரிஞ்சிருக்கு.ஏதோ ஒரு திட்டத்தோட அங்க 'மாநில போலீசாரை' ஏராளமா குவிச்சிருக்காங்க. உள்ளே போன ரெண்டு தலைவரையும் போலீஸ் கடுமையா தடுத்திருக்கு.
"எங்ககிட்ட விமான நிலைய நுழைவு அனுமதிச்சீட்டு இருக்கு. நீங்க எப்படி தடுக்கலாம்? இந்த எல்லையை விமான நிலையத்தை பாதுகாப்பதற்கென்றே இருக்கிற மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைதான் கவனிக்குது. முறைப்படி பார்த்தால் அவிங்கதான் தடுக்கணும். நீங்க யார் எங்களை தடுக்குறதுக்கு? நாங்க ஒருவரை வரவேற்க வந்திருக்கின்றோம். மற்றபடி போராட்டம் எதையும் நடத்த வரலே" அப்படீன்னு வைகோ வாதாடியிருக்காரு. ஒரு கட்டத்துல காரம் சாரமான மோதல் ஆகியிருக்கு. அப்போ ஒரு போலீஸ் அதிகாரி வைகோவைப் பிடிச்சு தள்ளாத குறையா தள்ளியிருக்காரு" என்றார் சுவருமுட்டி.
இரண்டு தலைவரும் உள்ள போயிருக்காங்க.அதுக்கு முன்னாடியே ரகசியமான இந்த தகவலு கலைருக்கு தெரிஞ்சிருக்கு.ஏதோ ஒரு திட்டத்தோட அங்க 'மாநில போலீசாரை' ஏராளமா குவிச்சிருக்காங்க. உள்ளே போன ரெண்டு தலைவரையும் போலீஸ் கடுமையா தடுத்திருக்கு."எங்ககிட்ட விமான நிலைய நுழைவு அனுமதிச்சீட்டு இருக்கு. நீங்க எப்படி தடுக்கலாம்? இந்த எல்லையை விமான நிலையத்தை பாதுகாப்பதற்கென்றே இருக்கிற மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைதான் கவனிக்குது. முறைப்படி பார்த்தால் அவிங்கதான் தடுக்கணும். நீங்க யார் எங்களை தடுக்குறதுக்கு? நாங்க ஒருவரை வரவேற்க வந்திருக்கின்றோம். மற்றபடி போராட்டம் எதையும் நடத்த வரலே" அப்படீன்னு வைகோ வாதாடியிருக்காரு. ஒரு கட்டத்துல காரம் சாரமான மோதல் ஆகியிருக்கு. அப்போ ஒரு போலீஸ் அதிகாரி வைகோவைப் பிடிச்சு தள்ளாத குறையா தள்ளியிருக்காரு" என்றார் சுவருமுட்டி.
"இதுதான் ஊரறிஞ்ச விஷயமாச்சே. பிறகு என்ன நடந்தது?"-கோபாலு.
''இம்புட்டு களேபரம் நடந்துகிட்டிருக்கிறப்போ அங்கே சிறுத்தைகளோட தலைமை நிலைய நிர்வாகி வன்னி அரசுவும் இருந்திருக்காரு. அதைவிட இன்னொரு முக்கிய விஷயம் திருமாவும் அங்க இருந்தராம். ஆனா காரை விட்டு இறங்காம என்ன நடக்குதுன்னு கவனிச்சுகிட்டே இருந்தாராம். பார்வதி அம்மையார் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தா அவரும் போய் கலந்துகிறதா இருந்தாரு.ஆனால் அப்படி நடக்கலை. நடக்கப் போறதில்லைங்கிறதையும் தெரிஞ்சிக்கிட்டிருந்தாரோ என்னவோ! எனக்கு தெரியாதுப்பா. ஆனா அதுக்கு முன்னாடியே நடக்குற ஒவ்வொரு தகவலும் போலீஸ் மூலமா 'மேலிடத்துக்கு' போய்கிட்டே இருந்திருக்கு. ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி பார்வதி அம்மையாரை திருப்பி அனுப்பிட்டாய்ங்க. அந்த தகவலை சொன்ன போது வைகோ கதறி அழுதிட்டாராம். பழ. நெடுமாறனும் கதறியிருக்காரு. 'உலகத்தில் இப்படி ஒரு கொடுமை நடக்குமா..!
எந்த கொடுமைக்காரனும் செய்யமாட்டானே. உலகமே கொடுங்கோலன்னு சொல்ற ராஜபக்சேகூட இப்படி செய்யலையே. மருத்துவத்திற்கு விசா கொடுத்து மலேசியாவுக்கு அனுப்பி வைக்க சம்மதிச்சானே..' என்று குமுறிய பழ. நெடுமாறன், அருகில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் வன்னி அரசுவை பார்த்து 'பாவிங்களா, பாவிங்களா. கொலைகாரன்கூட போய் கூட்டணி வச்சீங்களேடா. இப்போ பார்த்தீங்களா. இந்த கொடுமை நமக்கு போதுமா' என்று கண்ணீர் விட்டிருக்கிறார்''- சுவருமுட்டி"அதுக்கு வன்னி அரசு என்ன சொன்னாராம்.? பதிலுக்கு ஏதாவது கோபப்பட்டாரா?"- சித்தன்.
''சித்தனுக்கு நினைப்பை பாருங்கப்பா. அவிங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டா 'கூத்தாடிப் பாடு கொண்டாட்டமா போயிடுமே'ன்னு ஆசைப் படுறாரு" என்ற சுவருமுட்டி "எனக்கென்னமோ...நடந்து முடிஞ்சதை எல்லாம் பார்க்குறப்போ பக்காவா பிளான் போட்டபடி நடத்தியிருக்கு மத்திய அரசு. அதுக்கு கலைஞர்தான் காரணம்னு தோணுது" என்றார்.
"என்னப்பா நீ. எதுக்கெடுத்தாலும் கலைஞரையே குத்தம் சொல்ற. பாவம் அவர்பாட்டுக்க சிவனேன்னு செம்மொழி மாநாட்டு விஷயத்தைக் கவனிச்சிட்டிருக்காரு. 'இதெல்லாம் எனக்கு தெரியவே தெரியாது. அடுத்த நாள் செய்தித்தாளை பார்த்துதான் நான் தெரிஞ்சுகிட்டேன்னு' சொல்றாரே. அவரையே ஏன்பா வையிறீங்க" - சித்தன்.
''சித்தா நீ வாய மூடு. இருக்குற கடுப்புல உன்னைய போட்டுத் தள்ளிடுவேன். எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொன்ன கலைஞர் அதுக்கு முன்னாடி ஒரு வார்த்தைய சொன்னாரு கவனிச்சியா. 'அன்னைக்கு விமான நிலையத்தில் இருந்து ஏதோ பிரச்சனைன்னு
தகவல் வந்தது. பிறகு நான் தொடர்பு கொண்டு பேசினேன். பார்வதி அம்மையாரை மீண்டும் மலேசியாவிற்கே அனுப்பி வைத்துவிட்டதாக தகவல் கூறினார்கள்' என்று சொன்னார். ஏதோ பிரச்சனைன்னு சொன்னப்போவாவது அவர் என்ன ஏதுன்னு விசாரிச்சிருக்க வேண்டாமா? திருப்பி அனுப்பப் போகிறார்கள் என்று தெரிந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? 'இப்படி ஒரு குறைபாட்டோடு அழைத்து வந்திருக்கிறார்கள். நான் தலையிட்டுதான் அம்மையாரை அனுமதிக்க வைத்தேன்' என்று அவர் அரசியல் பேசுவதற்காவது செயல்பட்டிருக்கலாமேங்கிறதுதான் கேள்வி. அது மட்டுமில்லே, தனக்கு காலையில் செய்தித் தாளைப் பார்த்துதான் விஷயமே தெரியும் என்றிருக்கிறார்.அப்படியானால் எதற்காக மாநில போலீசாரை அங்கே பெரும் அளவில் அனுப்பினார்? இப்படியெல்லாம் பல கேள்வி இருக்குப்பா.இதுக்கெல்லாம் பதில் சொல்லாம வெறுமனே 'தெரியாது' ன்னு சொன்னா அப்புறம் எதுக்கு ஒரு மாநில முதலமைச்சரா இருக்கிறார்?''- கடுமை காட்டினார் சித்தன்.
தகவல் வந்தது. பிறகு நான் தொடர்பு கொண்டு பேசினேன். பார்வதி அம்மையாரை மீண்டும் மலேசியாவிற்கே அனுப்பி வைத்துவிட்டதாக தகவல் கூறினார்கள்' என்று சொன்னார். ஏதோ பிரச்சனைன்னு சொன்னப்போவாவது அவர் என்ன ஏதுன்னு விசாரிச்சிருக்க வேண்டாமா? திருப்பி அனுப்பப் போகிறார்கள் என்று தெரிந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? 'இப்படி ஒரு குறைபாட்டோடு அழைத்து வந்திருக்கிறார்கள். நான் தலையிட்டுதான் அம்மையாரை அனுமதிக்க வைத்தேன்' என்று அவர் அரசியல் பேசுவதற்காவது செயல்பட்டிருக்கலாமேங்கிறதுதான் கேள்வி. அது மட்டுமில்லே, தனக்கு காலையில் செய்தித் தாளைப் பார்த்துதான் விஷயமே தெரியும் என்றிருக்கிறார்.அப்படியானால் எதற்காக மாநில போலீசாரை அங்கே பெரும் அளவில் அனுப்பினார்? இப்படியெல்லாம் பல கேள்வி இருக்குப்பா.இதுக்கெல்லாம் பதில் சொல்லாம வெறுமனே 'தெரியாது' ன்னு சொன்னா அப்புறம் எதுக்கு ஒரு மாநில முதலமைச்சரா இருக்கிறார்?''- கடுமை காட்டினார் சித்தன்.மேலும் "நம்ப திருமாவளவன், ராமதாஸ், கி. வீரமணி எல்லாம் 'பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டதற்கு காரணம் ஜெயலலிதாதான். அந்தம்மா 2003-ம் வருஷம் முதல்வரா இருந்தப்போ திருச்சியில் இருந்த வேலுப்பிள்ளை, பார்வதி அம்மையார் இலங்கைக்கு போனாங்க. அதுக்கு முன்னாடி பல வருஷம் இங்கதான் இருந்தாங்க.அவிங்களால எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சனையும் வந்ததில்லை.அப்படி இருக்கிறப்போ 'அந்த தம்பதிகள் திரும்ப இந்தியாவிற்கு வர அனுமதிக்க கூடாது. அவர்களால் பிரச்சனை வரும்னு'மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடிதம் அனுப்பினாங்க. அதை கவனத்தில் எடுத்துகிட்ட மத்திய அரசு அவர்கள் இருவரையும் எச்சரிக்கை பட்டியலில் வச்சது.அதுதான் இப்போ திருப்பி அனுப்ப காரணமாயிடுச்சு. கலைஞர் என்ன பண்ணுவார்னு' சவுண்ட் விடுறாய்ங்க. இதுக்கு என்ன பதில்?" என்றார் சித்தன்.
"இந்த சித்தன் வாய்க்கு முதலில் ஒரு பிளாஸ்த்திரி போட்டு மூடுங்கப்பா.
குதற்கமா பதில் கொடுத்துகிட்டு இருக்காரு"-அன்வர் பாய்.
குதற்கமா பதில் கொடுத்துகிட்டு இருக்காரு"-அன்வர் பாய்.''சரி, அவிங்க சொல்றபடியே வச்சிக்கிடுவோம். இவரு என்ன சொல்றாரு. 2003-ம் வருஷம், இங்க முதல்வரா இருந்த ஜெயலலிதா கடிதம் எழுதினாங்க.அப்போ இங்க எதிர்கட்சியா இருந்தது தி.மு.க. ஆனால் மத்திய மந்திரி சபையில் தி.மு.க இடம்பெற்றிருந்தது. டெல்லியில பா.ஜ.க. ஆட்சி. பிரதமர் வாஜ்பாய். ஆதி நாளில் இருந்து ஈழ பிரச்சனைக்கு நான்தான் செக்கிழுத்துகிட்டிருக்கேன்னு சொல்ற கலைஞர் அப்போ ஏன் எதிர்க்கலை? அட ஜெயலலிதாவுக்காக வேண்டியாவது எதிர்த்திருக்கணும் இல்லியா..! என்ன செய்தாரு? ஏன் எதிர்க்கலை. அப்பவும் வாஜ்பாய் அரசுக்கு நெருக்கமா இருந்தவர்தானே கலைஞரு.
'அந்த ரெண்டு பேரையும் எச்சரிக்கை பட்டியலில் வைக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு. அவிங்களால தமிழ் நாட்டில் ஒரு சட்டம்- ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படலை'ன்னு சொல்லியிருக்க வேண்டியதுதானே. சரி அதுவும் வேண்டாம். இப்போ முதல்வரா வந்து நான்கு வருஷம் ஓடுது. போன வருடம் 2009-ம் ஆண்டு அங்க போர் முடிஞ்சதிலிருந்தே வேலுப்பிள்ளையையும், பார்வதி அம்மாளையும் மருத்துவத்திற்காக இந்தியா கொண்டு வரும் கோரிக்கை இருந்துச்சில்ல.தி.மு.க. கூட்டணியின் பிரச்சார பீரங்கியான திருமாவளவன் இலங்கைக்கு போன
போதே என்ன சொன்னார்? அவர்கள் இருவரையும் இந்தியாவிற்கு, அதாவது சென்னைக்கு அழைத்து வந்து நாங்களே மருத்துவம் பார்த்து பாதுகாக்கின்றோம் என்று சொன்னாரா இல்லையா? அப்படியென்றால் அதற்கான முனைப்பில் இறங்கியிருக்க வேண்டுமா இல்லயா? அப்படி இறங்கும் போதாவது 'அவர்கள் இருவரும் எச்சரிக்கை பட்டியலில் இருக்கிறார்கள்' என்பதை அறிந்து அதை நீக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமா இல்லையா?''- கிடுக்கிப்பிடி கேள்வியைப் போட்டார் சுவருமுட்டி.
'அந்த ரெண்டு பேரையும் எச்சரிக்கை பட்டியலில் வைக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு. அவிங்களால தமிழ் நாட்டில் ஒரு சட்டம்- ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படலை'ன்னு சொல்லியிருக்க வேண்டியதுதானே. சரி அதுவும் வேண்டாம். இப்போ முதல்வரா வந்து நான்கு வருஷம் ஓடுது. போன வருடம் 2009-ம் ஆண்டு அங்க போர் முடிஞ்சதிலிருந்தே வேலுப்பிள்ளையையும், பார்வதி அம்மாளையும் மருத்துவத்திற்காக இந்தியா கொண்டு வரும் கோரிக்கை இருந்துச்சில்ல.தி.மு.க. கூட்டணியின் பிரச்சார பீரங்கியான திருமாவளவன் இலங்கைக்கு போன
போதே என்ன சொன்னார்? அவர்கள் இருவரையும் இந்தியாவிற்கு, அதாவது சென்னைக்கு அழைத்து வந்து நாங்களே மருத்துவம் பார்த்து பாதுகாக்கின்றோம் என்று சொன்னாரா இல்லையா? அப்படியென்றால் அதற்கான முனைப்பில் இறங்கியிருக்க வேண்டுமா இல்லயா? அப்படி இறங்கும் போதாவது 'அவர்கள் இருவரும் எச்சரிக்கை பட்டியலில் இருக்கிறார்கள்' என்பதை அறிந்து அதை நீக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமா இல்லையா?''- கிடுக்கிப்பிடி கேள்வியைப் போட்டார் சுவருமுட்டி."அப்படிப் போடு. இம்புட்டு விஷயம் இருக்கா...! போட்டுத்தாக்குறான்யா சுவருமுட்டி"- கோட்டை போபாலு.
''நான் கேட்குறது நியாயம்தானேப்பா. நீங்க அவிங்க ரெண்டு பேரையும் இங்கே கொண்டுவந்து வைத்தியம் பார்த்து பராமரிக்கிறோனு சொன்னது ஒண்ணு பொய்யா இருக்கணும். சும்மா ஒரு அரசியல் ஸ்டண்டுக்கு சொன்னதாக இருந்திருக்கணும். உண்மையான அக்கறையில் சொன்னதா இருந்தா அதுக்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கணும். இறங்கியிருந்தா இந்த எச்சரிக்கைப் பட்டியல் தெரிஞ்சிருக்கணும். கலைஞரும் அவருக்கு துணையா ஒத்தூதும் கோஷ்டிகளும் இதற்கு என்ன பதில் சொல்லப் போறாய்ங்க?'' போட்டுக் கலாய்த்தார் சுவருமுட்டி.
"மவனே. உன்னைய சாதாரண தண்ணி பார்ட்டின்னு நினைச்சேன். இம்புட்டு அரசியல் பேசுறியேப்பா"- அங்கலாய்த்தார் கோபாலு.
"சரிப்பா, இப்போ திரும்பவும் பார்வதி அம்மையாரை கொண்டு வந்து இங்கே வச்சு வைத்தியம் பார்க்கணும். அதுக்கு முதல்வர் நடவடிக்கை எடுக்கணும்னு சில பேர் சொல்றாங்களே.அது பற்றி என்ன நினைக்கிறே?"- சித்தன்.
''இப்போ கேட்டியே. இது நியாயமான கேள்வி. அதாவதுப்பா... பழ. நெடுமாறன்,வைகோ அரசியல் செய்வதற்கு வாய்ப்பா போயிடக்கூடாதுன்னுதான் அம்மையாரை திருப்பி அனுப்பினாங்க. இளைஞர்கள் எல்லாம் பார்வதி அம்மையாரை போய்ப் பார்க்க பார்க்க, எழுச்சி ஏதாவது வந்து,அது வைகோவிற்கு சாதகமா போயிடக் கூடாதுங்கிற திட்டம் நிறைவேறிடுச்சு. இப்போ மறுபடி கலைஞர் முயற்சி எடுத்து இங்க கொண்டு வந்தா தி.மு.க மேல ஒரு திருப்தியான எண்ணம் வந்துடும் மக்களுக்கு.அதை கலைஞரே முன்வந்து செய்தா நல்லாயிருக்காது.'பார் பார்..இப்படியெல்லாம் அரசியல் செய்யுறாரு கருணாநிதி'ன்னு மக்கள் பேசிடுவாய்ங்க. அதனால கூட்டணி ஆளுங்க மூலம் அப்படி வாய்ஸ் விட வைக்கிறாரு. என்ன அரசியல் பிழைப்போ தெரியலப்பா'' என்று அலுத்துக் கொண்டார் கோபாலு.
நன்றி: குமுதம்.காம்
0 comments:
கருத்துரையிடுக