சேத்தியாத்தோப்பில் சரியாக இரவு 8 மணியளவில் டி.வி.எஸ். இருசக்கர வாகன விற்பனை நிலையத்திற்கு எதிரே அருள் உணவகம் பின்புறம் உள்ள வீடு திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. அதற்கான காரணம் இன்னும் சரியாக தெரியவில்லை. தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தமிழக அரசின் அவசர இலவச சிகிச்சை ஊர்தி ஒன்றும் பாதுகாப்புக்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊர் முழுதும் 8 மணியிலிருந்து மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தீ அணைந்து அப்பகுதி முழுதும் புகைமூட்டமாக காணப்படுவதாலும், மின்சாரம் இல்லாததாலும் நம்மால் புகைப்படம் எடுக்க முடியவில்லை.
தீ விபத்தினை காணவந்த பொதுமக்கள் அந்த பகுதியையே சுற்றி சுற்றி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காவல் துறையினர் மக்களை அப்புறப்படுத்துவதில் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். எரிவாயு அடுப்பால் தீப்பிடித்தது என்றும், மின்கசிவு என்றும், புகைப்பிடித்து எறியப்பட்ட சிகரெட் துண்டுதான் காரணம் என்றும் வழக்கம்போல் மக்கள் ஆளுக்கு ஒரு காரணம் சொல்லிக்கொண்டுள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக