புதன், 21 ஜூலை, 2010

நொறுக்குத்தீனி – 21.07.2010

நெய்வேலி புத்தகக் கண்காட்சி

வழக்கம்போல நெய்வேலி புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டும் அருமை. கடந்த எட்டு வருடமாக தவறாமல் சென்றுவருகிறேன். புத்தகங்களில் எதை வாங்குவது, எதை விடுவது என்றுதான் தெரியவில்லை. அனைத்தையும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. வாங்கவேண்டும் என்று விரும்பி வாங்காமல் வந்த புத்தகம் பாலகுமாரனின் ‘உடையார் புத்தகத்தொகுப்புகள். மற்றவைகளை வாங்கியாகிவிட்டது. சிறுவர்களுக்குத்தான் புத்தகம் அதிகம். ஆகவே முன்பே திட்டமிட்டு எங்கள் வீட்டு வாண்டுகளை அழைத்துச்சென்று விட்டேன்.

qqqqqqqqqqqqqqqqqqqqq

போங்கடா! நீங்களும் உங்கள் தமிழ்ப்பற்றும்!


சென்னையில் உள்ள அனைத்து கடைகளும் தமிழில் பெயர் பலகை வைக்கவேண்டும் என்று அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. உத்தரவு பிறப்பித்த அரசு சில சொற்களுக்கு தமிழ் வார்த்தைகளை தர ஏற்பாடு செய்திருக்கவேண்டும். அது இல்லாததால் பெரும்பாலான கடைகள் ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே தமிழில் மொழி பெயர்த்திருந்தன. உதாரணமாக தேனாம்பேட்டையில் இருக்கும் ‘The Raymond Shop’ என்ற கடை தன் பெயர் ‘தி ரேமண்ட் ஷாப் என்றே எழுதியிருந்தது. இதில் தமிழ் எங்கிருக்கிறது என்றுதான் தெரியவில்லை. அதனைப் பார்க்கும்போது பேசாமல் பெயர் பலகைகள் அனைத்தும் அவர்கள் விரும்பும் மொழியிலேயே இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. மேலே உள்ள பெயர் பலகைகளிலும் தமிழ் இருந்தால் தேடிப்படித்துக்கொள்ளுங்கள்.

qqqqqqqqqqqqqqqqqqqqq

மதராசப்பட்டினம்

பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை ஆரம்பித்திலிருந்தே தூண்டி எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் அழகாகவும் இருந்தபடம் ‘மதராசப்பட்டினம். அனைத்துத் துறைகளிலும் படம் அருமை. அந்தகால சென்னையைப் பார்பத்தற்கே அழகாக இருக்கிறது. கூவம் நதியில் படகைப்பார்க்கும்போது இப்போதைய கூவமும் நினைவில் வந்துபோகிறது. நாகரிகம் தந்தது வளர்ச்சியா இல்லை சுகாதாரமற்ற வாழ்க்கையா என்றுதான் தெரியவில்லை. மிகச்சிறந்த படம் தந்த படக்குழுவினருக்கு எங்கள் வாழ்த்துகள்!

qqqqqqqqqqqqqqqqqqqqq

வடலூரான் என்ன ஆனார்?

வலைப்பதிவிற்கு நான் வந்தவுடன் என்னை வரவேற்றவர்களில் வடலூரான் முக்கியமானவர். கழுகுப்பார்வை என்ற அவரது வலைப்பூவில் ஜனவரி மாதத்திற்குப் பிறகு எந்த பதிவும் வரவில்லை. வேலைப்பளு காரணமா என்று தெரியவில்லை. தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். மீண்டும் எழுதினால் படிப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன்.

qqqqqqqqqqqqqqqqqqqqq

சூர்யாகண்ணனுக்கு...

வடலூரானைப்போலவே சூர்யாக்கண்ணனும் எனக்கு மிகவும் முக்கியமானவர். அவரது வலைப்பூவை சிலர் செயலிழக்கச் செய்துவிட்டார்கள் என்பதை கேள்விப்பட்டபோது மிகவும் வருத்தமாக இருந்தது. செயலிழக்கச் செய்த மாக்களே!... யாருடைய வளர்ச்சியையும் உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் நேரடியாக மோதுங்கள். உங்கள் திறமைகளை நிரூபித்துக் காட்டுங்கள். அதைவிடுத்து இதுபோல் கேவலமான செய்கை சூர்யாக்கண்ணனுக்கு மேலும் புகழையேத் தேடித்தரும். சூர்யாக்கண்ணன் தொழில்நுட்பம் தெரிந்தவர். உங்களின் இந்த நடவடிக்கைகளை காலில் மிதிபட்ட அசுத்தமாக கழுவிவிட்டார். இப்போது உங்கள் முகத்தை எங்கே வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்?


qqqqqqqqqqqqqqqqqqqqq

இது தெரியாமப் போச்சே!
மக்களே! ஒன்று புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஓட்டுப்போட்ட கட்சி ஆட்சிக்கு வராமல் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் மிகவும் மகிழ்ந்துகொள்ளுங்கள். ஆட்சிக்கு வரும் கட்சிகள் எல்லாம் எந்தத் தொகுதிகளில் தமக்கு வாக்குகள் விழவில்லையோ அந்தத் தொகுதிகளைத்தான் விழுந்து விழுந்து கவனிக்கின்றன. உதாரணம் செம்மொழி மாநாட்டைக் காரணம் காட்டி கோவையில் நடைபெற்ற வளர்ச்சிப்பணிகள்(?). பணிகள் உண்மையிலேயே தரமுடன் நடைபெற்றதா இல்லையா என்பது தவிர்த்து பார்த்தோமானால் அதுதான் உண்மையோ என்றுகூட தோன்றுகிறது. ஆகவே வாக்காளப்பெருமக்களே! உங்களின் பொன்னான வாக்குகளை நீங்கள் விரும்பாத கட்சிக்கு அளிக்குமாறு மிகவும் தரம் தாழ்ந்து ... மன்னிக்கவும் சிரம் தாழ்ந்து கேட்டுக்கொள்கிறோம்.