வியாழன், 2 ஜூன், 2011

நொறுக்குத் தீனி - 02.06.2011

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. ஒவ்வொரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்போதும் தி.மு.க.வின் பெரும் தலை பெயர் ஒன்று அடிபடுகிறது. முதல் குற்றப்பத்திரிக்கை வந்தது; ராசா திகார் சென்றார். இரண்டாம் குற்றப்பத்திரிக்கை வந்தது; கனிமொழி துணைக்குப் போனார். இப்போது மூன்றாம் குற்றப்பத்திரிக்கையில் தயாநிதி பெயர் இடம்பெறும் என்ற பேச்சு பலமாக எழுந்திருக்கிறது. ஆனால் இன்னமும் தி.மு.க. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மக்களை முட்டாளாக்கும் வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் முழுதும் உணர்ந்து தி.மு.க.விற்கு ஏற்கனவே பலமான தண்டனை அளித்து விட்டார்கள். ஆகவே தி.மு.க. அவர்கள் செய்தார்களே இவர்கள் செய்தார்களே என்று மக்கள் மன்றத்தில் குழப்பும் வேலையை விடுத்து உரியமுறையில் விசாரணையை அணுகுவதுதான் சரியாக இருக்கும். மக்கள் தெளிவாகி விட்டாகள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறையும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வென்று சாதனை படைத்து விட்டது. இதற்கு வாழ்த்துகள் சொல்வதை விட இதில் முக்கியமான செய்தியாக நான் நினைப்பது, சென்னை அணியில் மட்டும்தான் இந்திய வீரர்கள் சிறப்பாகவும், குழு உணர்வுடனும் செயல்பட்டார்கள் என்பதே. மற்ற அனைத்து அணிகளும் வெளிநாட்டு வீரர்களை நம்பியே களத்தில் நின்றன. ஆனால் சென்னை அணியில் ரெய்னா, பத்ரிநாத், விஜய் என இந்திய வீரர்கள் டோனி தலைமையில் நம்பிக்கையோடு போராடினார்கள். அவர்களின் கூட்டு முயற்சிக்கே இந்த வெற்றி. இதனை மற்ற அணிகளும் புரிந்து கொண்டால் அடுத்து வரும் ஆண்டுகளில் ஐ.பி.எல். களைகட்டும். இல்லையென்றால் சென்னை மட்டுமே காலம் முழுதும் சாம்பியனாக இருக்கும்.

2 comments:

வி.ஆர்.ஷங்கர் சொன்னது…

திமுக தலைவர்க்கு இன்னமும் மக்களை குழப்புவதுதான் வேலை. ஏன்? வேறென்ன மக்களின் அனுதாபத்தை பெறமுடியுமே என்றுதான். ஏனெனில் அவர் காரியவாதி, கற்ப்பனைவாதி. காரியவாதி கருணாநிதியையும்,கற்ப்பனைவாதி கருணாநிதியையும் மக்கள் என்றோ நன்கு உனர்ந்துக்கொண்டுவிட்டார்கள்.

வி.ஆர்.ஷங்கர் சொன்னது…

திமுக தலைவர்க்கு இன்னமும் மக்களை குழப்புவதுதான் வேலை. ஏன்? வேறென்ன மக்களின் அனுதாபத்தை பெறமுடியுமே என்றுதான். ஏனெனில் அவர் காரியவாதி, கற்ப்பனைவாதி. காரியவாதி கருணாநிதியையும்,கற்ப்பனைவாதி கருணாநிதியையும் மக்கள் என்றோ நன்கு உனர்ந்துக்கொண்டுவிட்டார்கள்.