கடைசியில் விஜய் தொலைக்காட்சி தன்னிலை விளக்கம் அளிக்குமளவிற்கு ‘சூப்பர் சிங்கர்’ பிரச்சனை பெரிதாகிவிட்டது. நேற்று (29.09.2011) யார், யாருக்கு எவ்வளவு மக்கள் வாக்குகள் விழுந்தன என்பதை விஜய் தொலைக்காட்சி அறிவித்தது. எனக்குத் தெரிந்து விஜய் தொலைக்காட்சி இப்படி நடந்துகொண்டது இதுவே முதல்முறை என நினைக்கிறேன். ஸ்ரீனிவாஸ் வேறு வாக்களித்தவர்கள் மட்டுமே இதைப்பற்றி பேசவேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார். நானும் வாக்களித்திருக்கிறேன். ஆனால் வாக்களிப்பதையே விஜய் தொலைக்காட்சி கேலிக்கூத்தாக்கி வைத்திருக்கிறது. ஒருவரே ஒரு எண்ணிலிருந்தோ அல்லது ஒரு மின்னஞ்சல் முகவரியிலிருந்தோ எத்தனை முறை வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்று வைத்திருக்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்க முடியும்? மேலும் நடுவர்கள் அளித்த மதிப்பெண்கள் சத்யபிரகாஷிற்கு 516. சாய்சரணுக்கு 488.5. இரண்டிற்கு வித்தியாசம் 27.5. இப்படி இருக்க நடுவர்களின் மதிப்பெண்களையும், மக்களின் வாக்குகளையும் எப்படி ஒன்றாக்கினார்கள் என்பதும் கேள்விக்குறி. எப்படியோ இணையப் பதிவர்கள் நினைத்ததை சாதித்து காட்டி விட்டார்கள். சத்யபிரகாஷ் உண்டான மரியாதை நேற்று (29.09.2011) விஜய் தொலைக்காட்சியில் கிடைத்து விட்டது. அதற்கு அவர் இணையத்திற்குத்தான் நன்றி கூறவேண்டும்.
###########################################################
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு விருவிருப்பாக நடந்து முடிந்துவிட்டது. நமது ஊரில் இப்போது வரை பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.வில் கே.பி.டி.இளஞ்செழியன் (கே.பி.டி.திருமண மஹால்), தி.மு.க.வில் வழக்கறிஞர் மனோகரன், தே.மு.தி.க.வில் மதிவாணன் (ராயல் கார்ப்பரேஷன்) ஆகியோர் பெயர்கள் முடிவாகியிருக்கிறது. மற்றக் கட்சி விபரங்கள் இன்னும் தெரிய வரவில்லை. இறுதி விபரங்கள் அக்டோபர் 3 அன்று தெரியவரும். அப்போது கட்சி வாரியாகவும், வார்டு வாரியாகவும் தெரிவிக்கிறேன்.
###########################################################
வடலூர் – பண்ருட்டி சாலையில் பேருந்தில் மாலையில் செல்பவர்கள் தவறாது கவனிக்கவும். ஒவ்வொரு மரத்தின் கீழும் இரண்டு, மூன்று பேர் மது அருந்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த சாலையில் வாகனங்களில் செல்வோரும், பெண்களும் பாதுகாப்பாக செல்வது நல்லது.
###########################################################
தமிழக அரசு வழங்கும் மடிக்கணினி ஒன்று மென்பொருள் ஏற்றுவதற்காக என்னிடம் வந்தது. அதிலுள்ள வன்பொருட்கள் அனைத்தும் ஏறக்குறைய இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போலவே இருப்பதில் மகிழ்ச்சி. ஆனால் அதில் முதல்வரின் படம் தேவையா என்பதை அரசுதான் சிந்திக்க வேண்டும். தமிழக அரசின் முத்திரை மட்டும் போதுமானது என்று நான் நினைக்கிறேன்.
1 comments:
"தமிழக அரசு வழங்கும் மடிக்கணினி ஒன்று மென்பொருள் ஏற்றுவதற்காக என்னிடம் வந்தது. அதிலுள்ள வன்பொருட்கள் அனைத்தும் ஏறக்குறைய இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போலவே இருப்பதில் மகிழ்ச்சி."
உண்மை தகவலா.....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
கருத்துரையிடுக