செவ்வாய், 4 அக்டோபர், 2011

சேத்தியாத்தோப்பு உள்ளாட்சித் தேர்தல்!

சேத்தியாத்தோப்பை பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பு இன்னும் முழுமையாக தொடங்கவில்லை. பேரூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களில் திரு.கே.பி.டி.இளஞ்செழியன் (அ.தி.மு.க) அவர்களும், திரு.மனோகரன் (தி.மு.க.) அவர்களும் தனது பிரச்சாரத்தை முழுமையாகத் தொடங்கி முதல் கட்டமாக வாக்காளர்களை சந்தித்து ஆதரவைத் திரட்டி விட்டார்கள். மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. சேத்தியாத்தோப்பை தனது கோட்டையாக சொல்லிக் கொண்ட பா.ம.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளிலிருந்து பேரூராட்சித் தலைவர் பதவிக்கு யாரும் நிற்க முன்வரவில்லை என்று தெரிகிறது.


மற்றபடி வார்டு உறுப்பினர்களுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் சுயேச்சைகளாக நிற்கிறார்கள். அவர்கள் தங்களால் முடிந்த பிரச்சாரத்தை முழு மூச்சாகத் தொடங்கிவிட்டார்கள். தினந்தோறும் வீடு வீடாக சென்று தங்களுக்கு ஆதரவைத் திரட்டி வருகிறார்கள்.


மக்களைப் பொறுத்தவரை எப்போதும்போல மௌனமாகவே இருக்கிறார்கள். தலைவர் பதவிக்கு யார் வருவார்கள் என்று சிலரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தபோது நம்மால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. உள்ளாட்சித் தேர்தல் என்பதால் மக்கள் யாரும் தவறிக்கூட வாய் திறந்து தாங்கள் யாருக்கு வாக்களிக்க இருக்கிறோம் என்று சொல்லமாட்டேன் என்கிறார்கள்.


வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் விரைவில்...